காதலிக்க வேண்டும், திருமணம் செய்ய மாட்டியா? காதலனுக்கு டீ-யில் விஷம் வைத்த காதலி.! விழுப்புரத்தில் பகீர்.!



in Viluppuram a Love Girl Add poison To Love Boy in Tea 

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயசூர்யா. இதே பகுதியில் வசித்து வரும் பெண்மணி ரம்யா. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியதாக தெரியவருகிறது. 

காதல் ஜோடி மகிழ்ச்சியாக தங்களின் காதலை தொடர்ந்த நிலையில், ரம்யா தன்னை திருமணம் செய்ய வேண்டி ஜெயசூர்யாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஜெயசூர்யாவோ அதற்கு மறுத்ததாக தெரியவருகிறது.

இதையும் படிங்க: செவிலியரை விடுதியில் புகுந்து கத்தியால் குத்திய இளைஞன்; கோவையில் பரபரப்பு சம்பவம்.!

வாட்ஸப்பில் தகவல்

இதனால் ஆத்திரமடைந்த ரம்யா, ஜெயசூர்யாவுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்து இருக்கிறார். இந்த தகவலை ஜெயசூர்யாவுக்கு ரம்யா வாட்ஸப்பில் அனுப்பி இருக்கிறார். 

Love

காதலி, பெற்றோர்க்கு வலை

பதறிப்போன ஜெயசூர்யா தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறி, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். சூர்யாவின் தற்கொலை முயற்சி தகவலை அறிந்த பெற்றோர், விரைந்து வந்தனர். 

அவரின் ஸ்மார்ட்போனை எதற்ச்சையாக சோதித்தபோது காதலி விஷம் கொடுத்தது தெரியவரவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் ரம்யா மற்றும் அவரின் பெற்றோரை தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க: பெரம்பலூர்: 20 வயது மாணவருடன் ஓட்டம் பிடித்த 27 வயது பேராசிரியை.. கணவர், குழந்தை பரிதவிப்பு.!