பாண்டியன் ஸ்டோர்ஸ் "தனம் அண்ணி"யா இது.?! வாலி படத்தில் எப்படி இருக்காங்க பாருங்க.!



Vijay TV Pandian stores sujitha rare picture in vaali movie

பாக்யராஜின், 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சீரியல் நடிகை சுஜிதா நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக சுஜிதா நடித்து இருக்கிறார். மேலும், அஜித்தின் வாலி திரைப்படம் பற்றி தெரியாதவரே இருக்க முடியாது. 

அந்த திரைப்படத்திலும் சுஜிதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். நிறைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த சுஜிதாவிற்கு வெள்ளி திரை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்று கூறவேண்டும். ஆனால் சின்னத்திரை அவரை கொண்டாடியது.

Sujitha

அவர் நடித்த சீரியல்கள் அனைத்துமே ஹிட், அதிலும் விஜய் டிவியில் அவரது நடிப்பில் வெளியாகிய, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அவருக்கு மிகவும் ஸ்பெஷலானது. அதில், "தனம் அண்ணி" என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து பல குடும்பங்களின் வீட்டில் ஒருவராக இருந்தவர். சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். 

இதையும் படிங்க: அப்பாவை போல உருவத்தில் அப்படியே இருக்கும் நடிகர் பிரபுதேவா மகன்! இணையத்தில் அவரே வெளியிட்ட வீடியோ இதோ..

ஆனால், எதிரியுமே கிளாமர் என்பது துளி கூட இருக்காது. இந்த நிலையில், வாலி படத்தில் அவர் பள்ளி சிறுமியாக நடித்திருப்பார். அவரது அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதையும் படிங்க: விஜய்டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் திடீரென நடந்த விபத்தில் கதையில் எதிர்பாராத ட்விஸ்ட்.....வைரலாகும் வீடியோ காட்சி....