குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகர் விஜயகாந்த் ..! என்ன ஸ்பெஷல் தெரியுமா...? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...



actor-vijayakanth-celebrate-wife-birthday-our-home

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் விஜயகாந்த். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருந்த அவரை மக்கள் அனைவரும் பாசமாக கேப்டன் என அழைத்து வந்தனர். டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த அவர் சமூக நலம் மற்றும் தேசப்பற்று கொண்டு ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த விஜயகாந்த் திடீரென அரசியலில் தனது கவனத்தை செலுத்தியதும் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார். அதன்பின் அரசியலில் தனது முழு நேரத்தையும் செலவிட்டார். ஆனால் சில காலங்களாக அவரின் உடல்நிலை சரியில்லாத  நிலையில் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை.

இந்நிலையில் அண்மையில் விஜயகாந்த்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. அந்த  புகைப்படத்தில் முகம் எல்லாம் மாறி வேறொருவர் போல் எலும்பும் தோலுமா  இருந்தார் விஜயகாந்த். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் இன்று தனது மனைவியின் பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.