மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரண்டு மனைவியுடன் தனக்காக தானே சிலை வைத்துள்ள விஜயகுமார்.. கலாய்த்து கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.?
1961ம் ஆண்டு வெளியான "ஸ்ரீவள்ளி" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் விஜயகுமார். பின்னர் 1974ம் ஆண்டு வெளியான "அவள் ஒரு தொடர்கதை" படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அன்றிலிருந்து தற்போது வரை கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வரும் விஜய குமார், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும், இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஜயகுமார் 1969ஆம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கவிதா, அனிதா மற்றும் அருண்விஜய் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். அதன் பின் 1976ம் ஆண்டு சக நடிகையான மஞ்சுளாவைத் திருமணம் செய்து கொண்டார் விஜயகுமார்.
இவர்களுக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவருமே திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், விஜயகுமாரின் சொந்த ஊரில் இரண்டு மனைவிகளுடன் தான் இருக்கும் நிலையில் ஒரு சிலையை வைத்து போட்டோஸ் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.