நெட்பிளிக்ஸில் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ள தமிழ் படங்கள் என்னென்ன? வெளியானது அசத்தல் லிஸ்ட்.!
நடிகர் விக்ராந்தின் மகன்களை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் விக்ராந்த். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. பின்னர் இவர் நடிப்பில் வெளியான முத்துக்கு முத்தாக திரைப்படம் ஓர் அளவிற்கு இவரை பிரபலமடைய வைத்தது.
அதனை தொடர்ந்து சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வில்லனாக ஒரு சில படங்களில் நடித்தார். இவர் நடித்த கவண், கெத்து, துப்பறிவாளன், பக்ரீத் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. விக்ராந்த் கடந்த 2009 ஆம் ஆண்டு சீரியல் நடிகையான மானாசாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது அழகிய இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் விக்ராந்தின் மகன்கள் ஹாலிவுட் நடிகர்கள் போல் இருக்கிறார்கள் என கமெண்ட் செய்துள்ளனர்.