நெட்பிளிக்ஸில் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ள தமிழ் படங்கள் என்னென்ன? வெளியானது அசத்தல் லிஸ்ட்.!
கடந்த 2024ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அமரன், தி கோட், மகாராஜா, மெய்யழகன் ஆகிய படங்களை, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது ஓடிடி தளத்தில் வெளியிட்டு இருந்தது.
அதனைத்தொடர்ந்து, 2025ம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கவுள்ள திரைப்படங்கள் தொடர்பாக அந்நிறுவனம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2025ல் வெளியாகவுள்ள திரைப்படம்
இதுதொடர்பான தகவலில், பொங்கல் வாழ்த்துடன் 2025 ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்களின் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: குடும்பஸ்தன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ண கட்டிக்கிட்டு பாடல் வெளியீடு; லிங்க் உள்ளே.!
அதன்படி, குட் பேட் அக்லீ, ரெட்ரோ, பைசன், ட்ராகன், காந்தா, பெருசு, விடாமுயற்சி, தக் லைப், பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படம் ஒன்று ஆகிய படங்களை நெட்பிளிக்ஸ் வாங்கவுள்ளது.
. @NetflixIndia 's 2025 Tamil movies lineup..@ProRekha pic.twitter.com/sJ0dtin69r
— Ramesh Bala (@rameshlaus) January 15, 2025
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம்; வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!