மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ!
யாமிருக்க பயமேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. பண்ணி மூஞ்சி வாயன் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. மாதம் 10 படங்கள் வெளிவந்தால் அதில் குறைந்தது 8 படங்களிலாவது யோகிபாபு நடித்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் தனி ஒரு காமெடியனாக கொடிகட்டி பரந்த நடிகர் வடிவேலு திரையுலகில் இருந்து விலகியதை அடுத்து நடிகர் சூரி அவரது இடத்தை பிடித்தார். இருந்தாலும் சூரியை விட யோகிபாபுவுக்கே அதிக வரவேற்பு கிடைத்தது. இதனால் நடிகர் யோகிபாபுவிற்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின.
இந்நிலையில் தான் நடித்துவந்த படங்களுக்கு ஒரு நாளைக்கு 2 லட்சம் சம்பளம் வாங்கிவந்த யோகிபாபு சமீபத்தில் அதை 3 லட்சமாக உயர்த்தினார். தற்போது மீண்டும் தந்து சம்பளத்தை உயர்த்தியுள்ள யோகிபாபு ஒரு படத்திற்கு 5 லட்சம் சம்பளம் வாங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.