மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாடர்ன் லுக்கில் விருமாண்டி பட நடிகை அபிராமி! புகைப்படம் உள்ளே!
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி. கமல், பிரபு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார்.
தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து கொடுத்து பல தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தன. குறிப்பாக அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 40 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் அவர் மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.