மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அணைத்து பெண்களும் வாய் திறக்கவேண்டும்! நடிகை அமலாபால். எதைப்பற்றி சொல்கிறார் தெரியுமா?
தனக்கு பாலியல் துன்புறுத்தல் வந்தபோது அதை தைரியமாக வெளியே சொன்னதாகவும், அதேபோல் அணைத்து பெண்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை வெளியே சொல்லவேண்டும் என்றும் நடிகை அமலாபால் கூறியுள்ளார்.
தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை பெண்கள் #MeToo என்ற ஹாஷ்டாக் மூலம் பகிர்ந்து வருகின்றனர். பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றியும், சினிமா துறையில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும் பகிரப்பட்டு வருகிறது.சமீபத்தில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார்.
தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு தான் சென்று இருந்ததாகவும் அப்போது வைரமுத்து தன்னை கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாகவும் சின்மயி புகார் கூறி இருந்தார். இதற்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழில் பிரபல நடிகையான அமலாபால் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை வெளியே கூறியது போல பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்கள் அனைவரும் தங்களது கஷ்டங்களை வெளிப்படையாக கூறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.