மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. நடிகை அசினின் மகளா இது.! நல்லா வளர்ந்து அப்படியே அம்மா மாதிரியே இருக்காரே.! தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டு டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். முதல் படத்திலேயே அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து நடிகை அசின் கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம், காவலன் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். நடிகை அசின் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2016ம் ஆண்டு ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார் . இவர்களுக்கு அரின் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நடிகை அசின் அவ்வப்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் மகளின் புகைப்படங்களை வெளியிடுவார்.அவர் தற்போதும் தனது மகள் பீச்சில் மணலில் விளையாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அசினின் மகளா இது.! நல்லா வளந்துட்டாரே என கூறி வருகின்றனர்.