மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகை அசினை நியாபகமிருக்குதா.! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் அசின். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளிலும் திரைப்படங்களில் கதாநாயகியாக ஜொலித்து வந்தார். இவ்வாறு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து திரைத்துறையில் கொடிகட்டி பறந்து வந்தார் அசின்.
தமிழில் முதன்முதலில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பின்பு விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து போக்கிரி, கஜினி என அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தார்.
இவ்வாறு தமிழ் திரைதுறையில் தனக்கென தனி இடத்தை தனது நடிப்பு திறமையின் மூலம் நிலைநாட்டி கொண்டார் நடிகை அசின். இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்பு தமிழில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான காவலன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து திரை துறையில் இருந்து திருமணத்திற்கு பின்பு விலகிவிட்ட நடிகை அசின், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவான நடிகையாக இருந்து வருகிறார். இவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருவதோடு நடிகை அசினா இது! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.