மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 நிமிஷம் வீண்! என்னது.. நடிகை அசின் கணவரை விவாகரத்து செய்கிறாரா?? அவரே போட்டுடைத்த உண்மை!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் அசின். ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் s/o மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா,விக்ரம் என பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் நடிகை அசின் பாலிவுட்டிலும் கால்பதித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இவ்வாறு திரையுலகில் டாப் ஸ்டாராக கொடிகட்டி பறந்த அவர் கடந்த 2016ஆம் ஆண்டு, மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். அவர்களுக்கு ஆரின் என்று அழகிய மகள் உள்ளார். இந்நிலையில் அண்மையில் அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது திருமண புகைப்படங்கள், கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கியதாக கூறப்படுகிறது. உடனே அசின் தனது கணவரை விவாகரத்து செய்து பிரிய போவதாக தகவல்கள் பரவத் தொடங்கியது.
இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், எங்களது கோடை விடுமுறையில் ஒருவருக்கு அருகில் ஒருவர் அமர்ந்து, காலை உணவை ரசித்துக் கொண்டே கற்பனையான, லாஜிக்கே இல்லாத இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கிறோம்.
இது நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து திருமணம் குறித்து திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது நாங்கள் பிரேக் அப் செய்துவிட்டதாக பரவிய செய்தியை நியாபகப்படுத்துகிறது. இன்னும் கொஞ்சம் சிறப்பாக ட்ரை பண்ணுங்கள். ஓர் அற்புதமான விடுமுறையின் 5 நிமிடத்தை இந்த செய்தியில் வீணடித்துவிட்டேன். வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார்.