மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் டிவியை நடிகையின் பெயரை வைத்து இன்ஸ்டாகிராமில் பண மோசடி.. பதறியபடி நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாம் இருவர் நமக்கு இருவர், கனா காணும் அப்பா அம்மா உட்பட பல தொடர்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் சின்னத்திரை நடிகர் அஷ்ரிதா ஸ்ரீதாஸ். இவரது தாயாரின் பெயரில் மர்ம நபர் அவரது பின்தொடர்பாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணமோசடியில் ஈடுபட முயற்சித்ததாக தெரியவருகிறது.
இந்த தகவலை அறிந்த சின்னத்திரை நடிகை ஸ்ரீதாஸ், எனது அம்மாவின் பெயரை கூறி யாரேனும் பணம் அனுப்ப கோரிக்கை வைத்தால் எக்காரணம் கொண்டும் பணம் அனுப்பிவிட வேண்டாம். அது எனது தாய் கிடையாது. அவர் எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், "சமீபத்தில் எனக்கு பலரும் அனுப்பிய குறுஞ்செய்ய்தியில் எனது தாய் பணம் கேட்பதாக தெரிவித்து இருந்தீர்கள். உங்களின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லையா? என கேட்டிருந்தீர்கள். எனது அம்மா எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை. அவருக்கு என முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகள் இல்லை.
எனது அம்மாவின் புகைப்படமும் அது இல்லை. உங்களிடம் யாரேனும் என்னை அறிமுகம் செய்கிறேன், எனக்கு உடம்பு சரியில்லை என கூறினால் அவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டாம். பணம் அனுப்பி ஏமார்ந்துவிடவேண்டாம் என்பதால் விடியோவை நான் பதிவிடுகிறேன். யாரும் தவறாகி நினைக்க வேண்டாம். சினிமா நட்சத்திரங்களை பார்க்க ஆசை என பணம் அனுப்பிவிட வேண்டாம்" என பேசியுள்ளார்.