திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பச்சை நிற உடையில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை பாவனா... வைரலாகும் புகைப்படம்.!
தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை பாவனா. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் நடிகை பாவனா.
அதனை தொடர்ந்து வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்களில் நடித்து இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பச்சை நிற உடையில் தேவதையாக ஜொலிக்கும் அழகில் அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.