'துணியில்லாம நடுரோட்ல நின்னேன்.' சித்தப்பு சரவணனின் மோசமான அனுபவம்.. கண்ணீர் விட்ட நடிகர்.!
'துணியில்லாம நடுரோட்ல நின்னேன்.' சித்தப்பு சரவணனின் மோசமான அனுபவம்.. கண்ணீர் விட்ட நடிகர்.!
ஹீரோவாக உச்சம் தொட்ட நடிகர்
கோலிவுட் சினிமாவில் 1990-களில் சினிமாவில் ஹீரோவாக நிறைய திரைப்படங்களில் பிக் பாஸ் சரவணன் நடித்துள்ளார். பார்ப்பதற்கு அவர் விஜயகாந்த் போலவே இருப்பதால் இவருக்கு திரை துறையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவரது நடிப்பில், சூரியன் சந்திரன், செவத்த பொண்ணு, தாய் மனசு, பார்வதி என்னை பாரடி, அபிராமி போன்ற நிறைய ஹிட் படங்கள் வெளியாகின. ஹீரோவாக இவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த சரவணன் சில படங்களை தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். சந்தோஷம் மற்றும் விஸ்வநாத் உள்ளிட்ட படங்களை தயாரித்து நடித்து அதன் மூலம் அவருக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டது.
தயாரித்த படத்தால், துவண்ட வாழ்க்கை
இதனால் தனது சொத்து, பணம் எல்லாவற்றையும் இழந்தார். இந்த தோல்வி அவரை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கியது. இதனால், ஹீரோ வாய்ப்புகளும் பறிபோனது. நீண்ட இடைவெளிக்கு பின் சூர்யாவின் நந்தா படத்தில் வில்லனாக நடித்தார். இவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த அளவிற்கு தோற்றத்தில் மாற்றம். அதன் பின் அமீரின் பருத்திவீரன் திரைப்படத்தில் செவ்வாழையாக நடித்த அவருக்கு சினிமா துறையில் மறுபிறப்பு கிடைத்தது என்றுதான் கூற வேண்டும். அதன் பின் சரவணன் நகைச்சுவை கலந்த குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதையும் படிங்க: " அண்ணனை சைட் அடிப்பியா என கேட்ட தோழிகள்" சூர்யாவின் தங்கை கூறிய உண்மை சம்பவம்.!?
நிர்வாணமான நடிகர்
அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்த போது, தனது வாழ்க்கையின் சோக பக்கங்களை நமக்கு வெளிப்படுத்தினார். சமீபத்தில் ஒரு பேட்டியில் சரவணன், "இரண்டு படங்களை தயாரித்து என் சொத்தை இழந்து, நடுத்தெருவுக்கு வந்தேன். போட்டுக்கிட்டு இருந்த துணியைக் கூட என் அண்ணன் தம்பிங்க எடுத்துட்டு ஓடிட்டானுங்க.
அந்த இடத்துல நான் நிர்வாணமா நின்னேன். சாப்பாட்டிற்கே வழியில்லாம நிற்கதி ஆனேன். இப்போ மறுபிறப்பு எடுத்து வந்தேன் என்றுதான் சொல்லணும். இது நிச்சயம் கடவுளோட அருளாள நடந்ததுதான்." என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபுதேவாவை காதலித்ததற்கான காரணம்.. நயன்தாரா சொன்ன விளக்கம்..! ரசிகர்கள் கோபம்.!?