மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாமனாரிடம் சித்ரா பேசிய ஆடியோ பதிவு.. வழக்கில் அடுத்த திருப்பம்.. சித்ராவை நாளுக்கு நாள் டார்ச்சர் செய்த ஹேம்நாத்
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் மேலும் ஒரு திரும்பமாக அவர் இறப்பதற்கு முன் அவரின் மாமனாருடன் பேசிய ஆடியோ பதிவு குறித்த தகவல்கள் தற்போது வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானானவர் நடிகை சித்ரா. இவர் சமீபத்தில் ஹோட்டல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சித்ராவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவரது கணவர் ஹேம்நாத் கொடுத்த மனஅழுத்தம்தான் காரணம் என கூறப்படுகிறது.
ஹேம்நாத் - சித்ரா இருவரும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஹேம்நாத் சித்ராவின் சீரியல் வாழ்க்கையில் அதிகம் குறுக்கிட்டுள்ளார். சித்ராவுடன் நடித்த சக நடிகர்களை வைத்து சித்ரா மீது சந்தேக பார்வைகளை வீசி, அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு கொடுமை படுத்தியுள்ளார்.
மேலும், சித்ராவை நடிப்பு வாழ்க்கையை விட்டு விலக்கும்படியும் ஹேம்நாத் வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில்தான் தனது மாமனார் ரவிச்சந்திரனிடம் ஹேம்நாத் தனக்கு கொடுக்கும் கொடுமைகள் குறித்து செல்போனில் அழுதபடி கூறிவந்துள்ளார். இந்த பதிவுகள் அனைத்தும் சித்ராவின் செல்போனில் பதிவாகியிருந்தநிலையில் அவர் இறந்தபிறகு ஹேம்நாத் அந்த பதிவுகளை சித்ராவின் செல்போனில் இருந்து நீக்கியுள்ளார்.
ஆனால் சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் காவல் துறையினர் டெலிட் செய்யப்பட்ட பதிவுகளை மீட்டெடுத்து, ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.