மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்க்கார் படத்தை எதிர்க்கும் நடிகை கௌதமி. என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இளையதளபதி விஜய். இவர் திரைப்படம் வெளிவரப்போகுது என்றாலே பலபேர் பலவிதமான எதிர்ப்புகளை கிளப்புவது வழக்கம்.
இந்நிலையில், என்னதான் இவரது படங்களுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய்யின் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு மிகவும் அதிகம். அந்த வகையில் நடிகை கவுதமி விஜய்யின் சர்கார் பட போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் , நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போல் இருந்ததால் பா.ம.க இளைஞர் அணி தலைவரான அன்பு மணி ராமதாஸ் ’விஜய் புகை பிடிப்பதை ஊக்கப்படுத்துகிறார், இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும்’ தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
அதே போல இந்த போஸ்டருக்கு பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்து வந்தது. இதையடுத்து தமிழக அரசும் அந்த புகைப்படத்தை நீக்குமாறு படக்குழுவிற்கு அறிவுரை செய்தது. இதனால் அந்த போஸ்ட்டர் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை கௌதமி நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் புற்று நோயில் இருந்து மீண்டு வந்தோருக்கான விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட கௌதமி பேசுகையில்”, திரைப்படங்களில் மாபெரும் நட்சத்திரமாக இருக்கும் நடிகராக இருந்தாலும் , புகைப்பிடிக்கும் காட்சிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை கௌதமி ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். அதனால் புற்றுநோய் குறித்த பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும், புகைப்பிடித்தால் புற்று நோய் ஏற்படும் என்று வலியுறுத்தி வரும் பல விழிப்புணர்வு முகாம்களிலும் குரல் கொடுத்து பங்குபெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.