பிரபல முன்னணி நடிகையின் கணவர், இசையமைப்பாளரின் தந்தை திடீர் மரணம்! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்!



actress jayachitra husband dead

தமிழில் குறத்தி மகன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதனை தொடர்ந்து  கதாநாயகி, குணச்சித்திர நடிகை மற்றும் சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஜெயசித்ரா. அதனை தொடர்ந்து கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படம் அவருக்கும் பெரும் புகழை பெற்று தந்தது.

ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட ஜெயசித்ரா நடிகர் ஜெய்சங்கர், சிவகுமார், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பின்னர் அவர் 1983 ஆம் ஆண்டு கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிகளுக்கு அம்ரீஷ் என்ற மகன் உள்ளார். அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளாகவும் உள்ளார். 

jayachitra

இந்த நிலையில் ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் இன்று திருச்சியில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அனால் அவரது மறைவிற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில் நடிகர் ஜெயசித்ராவின் கணவர் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

jayachitra