மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே சாக்ஷி செய்த காரியம்.! மோசமாக வச்சு செய்து பிரபல நடிகை என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எழுபது நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் 3 தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.
கவின், சாண்டி, சேரன், ஷெரின், தர்சன் , வனிதா, முகென், லாஸ்லியா ஆகிய 8 பிரபலங்கள் விளையாடி வருகின்றனர். இதில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் யார் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில், சாக்ஷி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் ஷெரினிடம் நீ தான் இதில் ஜெயிக்க வேண்டும் என்று அவரிடம் ரகசியமாக கூறியுள்ளார்.
இதற்கு எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷெரின் டைட்டில் வின் பண்ணனுமா, இந்த வாரம் தங்குவாங்களான்னு பாரும்மா என்று நக்கலாகப் பதிவிட்டுள்ளார். இதை கண்ட ஷெரின் ஆர்மி ரசிகர்கள் கடுப்பாகி விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.