என்னது.. நடிகை காஜலுக்கு இப்படியொரு புதிய காதலா! ஓப்பனாக அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!



actress-kajal-pasupathi-tweet-about-love

தமிழ் சினிமாவில் இதய திருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, சுப்பிரமணியபுரம், சிங்கம், கலகலப்பு 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகை காஜல் பசுபதி. மேலும் அவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். காஜல் பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

அப்பொழுது அவர் நடன இயக்குனராக இருந்த சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து திரைவாழ்க்கையில் பிஸியாக இருந்த காஜல் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது ஏதேனும் கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்குவார். இந்நிலையில் அவர் தற்போது காஜல் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 8 மாதமாக Dmல் பேசிட்டு இருந்தோம், நேற்று சொல்லிட்டேன், இன்று அக்சப்ட் செய்துவிட்டான், டுவிட்டர் லவ் என பதிவு செய்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் என்ன  இரண்டாவது திருமணத்திற்கு தயாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் அவர் பிராங்க் செய்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்