ஜெயம் ரவி பட நடிகை காம்னாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா... முதன் முறையாக வெளியான புகைப்படம்!!



Actress kamna with daughters unseen photo viral

கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இதயத்திருடன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் காம்னா. ஆனால் அந்த படம் அவர் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து நடிகர் ஜீவன் நடிப்பில் வெளியான மச்சக்காரன் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

ஆனால், அந்தப் படமும் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அதன் பின்னர் ராஜாதிராஜா, காசேதான் கடவுளடா போன்ற ஒரு சில படங்களில் மட்டும் நடித்து இருந்தார். காம்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

Kamna

நடிகை காம்னாவுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு சூரச் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு அழகிய பெண் குழந்தைகள உள்ளார்கள். இந்நிலையில் தற்போது காம்னா அன்னையர் தின ஸ்பெஷலாக தனது மகள்கள் இருவருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அட இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகள்களா என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.