நெட்பிளிக்ஸில் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ள தமிழ் படங்கள் என்னென்ன? வெளியானது அசத்தல் லிஸ்ட்.!
"எதற்காக பேட்டி கொடுக்க வேண்டும்?!" கோபத்தில் பேட்டியளித்த நடிகை கனகா!
1989ம் ஆண்டு "கரகாட்டக்காரன்" திரைப்படத்தில் அறிமுகமானவர் கனகா. இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார். தொடர்ந்து மலையாளம், கன்னடம், மற்றும் தெலுங்குத் திரைபபடங்களில் நடித்துள்ள கனகா, ரஜினி, பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அதிசயப்பிறவி, கும்பக்கரை தங்கையா, தாலாட்டு கேக்குதம்மா, கோயில் காளை, கிளிப்பேச்சு கேட்கவா, பெரிய குடும்பம், சிம்மராசி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கனகா, 1999ம் ஆண்டு விரலுக்கேத்த வீக்கம் படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார்.
இதையடுத்து மலையாளத்தில் 2000ம் ஆண்டு நரசிம்மம் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். கடந்த 23 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த கனகா, தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார் என்றும், அவர் இறந்துவிட்டார் என்றும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில் ஒரு பேட்டியில் கனகா, "நான் இப்போதும் அதே வீட்டில் தனிமையில் தான் இருக்கிறேன், யாருடனும் பேசக்கூடாது என்று நினைக்கவில்லை. ஆனால் நாம் என்ன பிசியாக இருக்கிறோம். எதற்காக பேட்டி கொடுக்க வேண்டும் என்று என் மனசாட்சி கேட்டதால் தான் ஒதுங்கி இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.