மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரவீந்தர் அப்படி இருக்குறதுதான் எனக்கு ரொம்ப பெரிய பிரச்சினை! இல்லைனா.. நடிகை மஹாலட்சுமி ஓபன்டாக்!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக தனது கேரியரை தொடங்கி பின் சீரியல்களில் களமிறங்கி ஹீரோயின், வில்லி என பல மொழிகளிலும் நடித்து தற்போது பிரபலமாக இருப்பவர் மகாலட்சுமி. அவர் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவரை விவாகரத்து செய்து இருந்தார்.
இந்தநிலையில் மகாலட்சுமி அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திடீர் திருமணம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மகாலட்சுமி ரவீந்தரை பணத்திற்காகதான் திருமணம் செய்தார் எனவும் பல விமர்சனங்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தனர். அப்பொழுது ரவீந்தரின் தொழில்தான் எனக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அவர் ஒரு தயாரிப்பாளராக இருப்பதால்தான் பணத்திற்கு ஆசைப்பட்டு நான் அவரை திருமணம் செய்து கொண்டதாக பலரும் கூறுகின்றனர். ஒருவேளை ரவீந்தர் சாதாரண மனிதராக, வேறு தொழில் செய்திருந்தால் கூட நான் அவரை திருமணம் செய்து இருப்பேன். அப்பொழுது இந்த பேச்சு வந்திருக்காது என்று கூறியுள்ளார்.