மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லியோ வில்லன் நடிகருக்கு தமிழ் கற்றுக் கொடுத்த பிரபலம்.! அட.. யாருனு பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!
உலகளவில் திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என பெரும் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஏகப்பட்ட சர்ச்சைகள், தடைகளை தாண்டி இந்த இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. மேலும் உலக அளவில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. லியோ படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரள வைத்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.
இவருக்கு லியோ சூட்டிங் ஸ்பாட்டில் பிரபலம் ஒருவர் தமிழ் கற்றுக் கொடுத்துள்ளாராம். அவர் வேறு யாருமல்ல. நடிகை மாயா தான். அந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை மாயா தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.