ப்ளீஸ்.. அந்த மாதிரி மட்டும் செய்யாதீங்க! கணவரின் மறைவிற்கு பின் உருக்கமாக நடிகை மீனா வெளியிட்ட முதல் பதிவு!!



actress-meena-first-tweet-after-husband-dead

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார்.

இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்த நிகழ்வு  திரையிலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் வித்யாசாகரின் மரணம் குறித்து பல வதந்திகளும் பரவியது. 

இந்த நிலையில் கணவரின் மறைவிற்குப் பின் முதன்முதலாக அண்மையில் மீனா தனது சமூகவலைத்தள பக்கத்தில் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், எனது அன்புக் கணவர் வித்யாசாகரின் இழப்பால் நான் மிகவும் வேதனையில் உள்ளேன். அனைத்து ஊடகங்களும் எங்களது தனியுரிமைக்கு மதிப்பளித்து, இந்தச் சூழலுக்கு அனுதாபம் காட்டுமாறு நான் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இந்த விஷயத்தில் தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள்.

meena

மேலும் இந்த இக்கட்டான நேரத்தில், எங்களது குடும்பத்திற்கு, துணையாக நின்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களால் இயன்றவரை முயற்சித்த அனைத்து மருத்துவக் குழுவினருக்கும், முதலமைச்சர், சுகாதாரதுறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் மற்றும் அன்பையும் பிரார்த்தனைகளையும் அனுப்பிய என் அன்பு ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.