மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"உங்கள விட உங்க அண்ணாவ தான் ரொம்ப புடிக்கும்" - இம்ப்ரஸ் செய்ய முயற்சித்த நடிகருக்கு நோஸ்கட் கொடுத்த தமிழ் நடிகை..!!
தமிழில் கடந்த 40 ஆண்டுகளாக கதாநாயகியாக ஜொலித்து வந்த மீனாவுக்கு சமீபத்தில் விழா எடுத்து சிறப்பித்தனர். இந்த விழாவில் மீனா தொடர்பாக பிரபுதேவா பேசிய சமயத்தில் அவரது மூக்கு உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
குழந்தை நட்சத்திரமாக 90sகளில் அறிமுகமான மீனா அன்று தொடங்கி இன்று வரை பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக ரஜினியின் படத்தில் அவர் நடித்து, பின்னாளில் வளர்ந்து ரஜினிகாந்துக்கும் ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருந்தார். கடந்த 2009-ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.
இந்த தம்பதிகளுக்கு பிறந்த நைனிகா விஜய்யின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டார். மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28-ஆம் தேதி மீனாவின் கணவரான வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மீனா தற்போது மீண்டும் சினிமா வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அவரின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நடந்தது. இந்த விழாவில் பிரபுதேவா மீனா குறித்து பேசுகையில், "மீனாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க ரொம்ப அழகா இருப்பாங்க. அந்த காலத்தில் எப்படி எப்படியோ இருப்பாங்க" என்று கூறினார். இதனைக் கேட்ட மீனா, "எனக்கு உங்களை விட உங்க அண்ணனை தான் பிடிக்கும்" என்று கூறியுள்ளார்.