மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. நடிகை மீனாவிற்கு இரண்டாவது திருமணமா?? மாப்பிள்ளை யார்? தீயாய் பரவும் தகவல்.!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகை மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
நடிகை மீனா தற்போதுதான் தனது கணவர் இறந்த சோகத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இதற்கு முதலில் நடிகை மீனா மறுப்பு தெரிவித்ததாகவும், பெற்றோர்கள் கட்டாயப்படுத்தியதால், தனது மகளுக்காக அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், நெருங்கிய உறவினர் ஒருவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலர் இது வதந்தி எனவும் கூறி வருகின்றனர்.