மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படையப்பா படத்தில் நீலாம்பரி கதா பாத்திரத்தை மிஸ் செய்த மாஸ் நடிகை! யார் தெரியுமா?
தென்னிந்திய சினிமா மட்டும் அல்லாமல் இந்தியா முழுக்க மிகவும் பிரபலமாவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். ரஜினியின் இந்த பேருக்கும் புகழுக்கும் காரணம் அவர் நடித்த திரைப்படங்கள்தான்.
ரஜினிகாந்த அவா்களுக்கு அவரது திரைவரலாற்றில் பல படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளன. அந்த வரிசையில் கே.எஸ்.ரவிகுமாா் அவா்களின் இயக்கத்தில் ரஜினி அவா்கள் நடித்து 1999-ம் ஆண்டு வெளிவந்த மெகாஹிட் திரைப்படம் படையப்பா.
இப்படத்தில் ரஜினியுடன், செளந்தா்யா, ரம்யா கிருஷ்ணண், சிவாஜி கணேசன், மணிவண்ணன், நாசா், செந்தில், அப்பாஸ் உட்பட முன்னனி நடிகா்கள் பலா் நடித்திருந்தனா்.
இதில் ரஜினிக்கு வில்லியாக ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்த நீலாம்பரி என்ற கதாபாத்திரம் இன்றுவரை பேசப்படுகிறது. நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு பேரும் புகழும் வாங்கி தந்த இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் வேறு ஒரு நடிகையாம்.
நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க இதன் இயக்குனர் KS ரவிக்குமார் முதலில் நடிகை மீனாவைத்தான் அணுகினாராம். படத்தின் கதையை கேட்ட மீனாவிற்கு கதை பிடித்துவிட்டதாம். மேலும் படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார் மீனா.
ஆனாலும் துரதிஷ்டவசமாக இவருக்கு ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனைகளால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாம். இதை சமீபத்திய ஒரு பேட்டியில் நடிகை மீனா அவா்களே கூறி உள்ளாா் என்பது குறிப்பிடதக்கது.