மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அருமை..இப்படியே சந்தோஷமா இருங்க.. கவலை மறந்து பழையபடி மாறிய நடிகை மீனா..! ஸ்டைலான உடையில் அசத்தலான வீடியோ வைரல்..!!
கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மீனா. இவர் நடித்த படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மீனா, அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் சில மாதங்களுக்கு முன்னதாக உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கணவரின் மரணத்திற்கு பின் மிகுந்த மன வேதனையடைந்த மீனா, அதிலிருந்து மீண்டுவர முடியாமல் சோகத்தில் மூழ்கியிருந்தார். அப்போது இவரது தோழிகள்தான் கணவர் இறந்த துக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற வைத்தனர். அண்மையில்கூட அவரது பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து மீனாவை மகிழ்ச்சியடைய செய்தனர்.
இந்த நிலையில் தற்போது செம ஸ்டைலான உடையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நீங்கள் இப்படியே எப்பொழுதும் சந்தோஷமா இருங்க.. அது போதும் என்று கூறி வருகின்றனர்.