மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வாழ்க்கை ரோலர்கோஸ்டர் மாதிரி., அதை வாழுங்க" - கணவரின் இழப்பிலிருந்து மீண்டுவர தொடங்கிய மீனா..! உருக்கத்துடன் பதிவு..!!
நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி மரணமடைந்தார். இவர் பல மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திடீரென காலமானார்.
இவரது இறப்பால் மீனா மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டுவர தொடங்கி இருக்கிறார். நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசி வருகிறார்.
மேலும் சமீபத்தில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்தார். இதற்கிடையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். அதில் தனது இளம் வயது புகைப்படங்களை பதிவிட்டு, அதனுடன் "வாழ்க்கை ரோலர் போஸ்டர் போன்றது.
அதனை வாழுங்கள். நேரம் மட்டுமே நம்மிடம் இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மீனாவின் இந்த உருக்கமான பதிவை கண்டு ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். திரையுலகினரும் நம்பிக்கையளிக்கும் வகையில் பேசி வருகின்றனர்.