மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நானும் நம்பிட்டன்.. என்கிட்ட மீனா பொய் சொல்லிட்டாங்க" - கலா மாஸ்டரின் கண்கலங்க வைக்கும் பதிவு..!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகியதை தொடர்ந்து, திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு நைனிகா என்ற மகள் உள்ள நிலையில், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துவந்தனர். ஆனால், கடந்த ஜூன் 29ஆம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் திடீரென உடல்நிலை சரியில்லாமல் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கணவரின் மறைவால் மனமுடைந்த மீனா, சில மனமுருகும் பதிவுகளையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டரின் திருமண நாளை முன்னிட்டு நடிகை மீனா கொடுத்த சர்ப்ரைஸ் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
இது குறித்து கலா மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் மீனா சர்ப்ரைஸாக வந்தது குறித்து குறிப்பிட்டிருந்த கலாமாஸ்டர் தனது கேப்ஷனில், "நேற்று மீனா என்னிடம் ஊரில் இல்லை என பொய் கூறியிருந்தார்.
நானும் அதை நம்பி, எனது திருமண நாளன்று அவர் இல்லை என சற்று வருத்தம் கொண்டேன். ஆனால் திடீரென அவர் வந்து என்னை ஆச்சரியப்படுத்தினார். லவ் யூ மீனா" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.