மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலியல் தொல்லை ஒன்றும் எனக்கு புதிதல்ல! நடிகை மீனா ஓபன் டாக்!
சினிமா துறை என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றாகிவிட்டது. வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைப்பது, வாய்ப்பு தருவதாக கூறி ஏமற்றவது இது போன்ற சம்பவங்கள் அந்த காலத்தில் இருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதை பற்றி யாரும் பேச முன்வரவில்லை.
இந்நிலையில், தெலுங்கு, தமிழ் என மாறி மாறி பரபரப்பை கிளப்பி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பல பிரபலங்கள் மீது இவர் பாலியல் குற்ற சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக முதன் முதலில் கருத்து தெரிவித்துள்ளார் தமிழ் சினிமாவின் முன்னாள் பிரபல நடிகை மீனா.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மீனா, திரை வாழக்கையில் தான் கடந்து வந்த பாதை குறித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். அப்போது சினிமா துறையில் பெண்களை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
இதை பற்றி கருத்து கூறிய மீனா, பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டும் இல்ல, அணைத்து துறைகளிலும் உள்ளது. சில வக்கிர புத்தியுடைய ஆண்கள் திருந்த வேண்டும். பெண்களை படுக்கைக்கு அழைக்கும் முன் தனது வீட்டில் உள்ள அம்மா, மகள் இவர்களை பற்றி யோசிக்க வேண்டும்.
மேலும் தனது காலத்திலும் இதுபோன்ற தவறுகள் நடந்தது என்றும், மேலும் நான் அந்த மாதிரியான விஷயங்களில் சிக்க வில்லை என்றும் மீனா தெரிவித்துள்ளார்.