மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீளாதுயரம்! கையில் கணவர் அஸ்தியுடன் கலங்கி நின்ற நடிகை மீனா! ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் 90'ஸ் காலக்கட்டங்களில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் மீனாவிற்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்ட து. அதற்கு முன் மீனா இறுதி சடங்குகளை செய்து கணவருக்கு தனது கடைசி முத்தங்களை கொடுத்து கதறியழுதார். பின்னர் தகனத்திற்கு பின் மீளமுடியா பெரும் சோகத்துடன் அஸ்தியை பெற்றுகொண்டு கலங்கியவாறே சென்றுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.