மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு! அழகில் ஆர்ப்பரிக்கும் நக்ஷத்ரா! வைரலாகும் புகைப்படம்.
தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகை நக்ஷத்ரா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தொகுப்பாளினி நக்ஷத்ரா:
சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமாகி, இன்று தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகைகளில் ஒருவர்
நக்ஷத்ரா நாகேஷ். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், பல்வேறு மேடை நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார்
நக்ஷத்ரா.
பிஸியான சீரியல் நடிகை:
இந்நிலையில்தான் இவர் சீரியல் பக்கம் கவனம் செலுத்த தொடங்கினார். நடிகை குஷ்பு முக்கிய கதாராபத்திரத்தில் நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் தொடரில் நாயகியாக அறிமுகமாகி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நக்ஷத்ரா. லட்சுமி ஸ்டார் தொடர் முடிவடைந்தநிலையில் தற்போது மீண்டும் மற்றொரு தொடர் மூலம் சீரியலில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
நாயகி தொடர்:
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நாயகி தொடரில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் நக்ஷத்ரா. சீரியல், சினிமா என ஒருபுறம் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவருகிறார் நக்ஷத்ரா.
தற்போது சேலை அணிந்து மிகவும் அழகா போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.