மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. தலைவி அட்டகாசம்! ஹனிமூனில் பயங்கர மாடர்னாக நடிகை நயன்தாரா! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்ற நட்சத்திர விடுதியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி திருப்பதிக்கு தரிசனத்திற்கு சென்றனர்.
அங்கு மாடவீதிகளில் காலணி அணிந்து சென்றதால் அவர்கள் சர்ச்சையில் சிக்கி பின் அதற்காக விக்னேஷ் சிவன் திருப்பதி தேவஸ்தானத்திடம் மன்னிப்பு கேட்டிருந்தார். பின்னர் புது மாப்பிள்ளை விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் கேரளாவிற்கு மாமியார் வீட்டுக்கு சென்றனர். மேலும் அவர்கள் தற்போது தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இருவரும் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை நாள்தோறும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஹனிமூனில் நயன்தாரா பயங்கர மாடர்னாக இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக 'அவள் என்னை போட்டோ எடுத்த போது நான் அவளைக் கிளிக் செய்தேன்' என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.