மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. நம்ம நஸ்ரியாவா இது! என்ன அடையாளமே தெரியாம இப்படி மாறிட்டாரே! தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்!!
தமிழ் மற்றும் மலையாள மொழியில் உருவான நேரம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. அதனை தொடர்ந்து அவர் அட்லீ இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜாராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தனுசுடன் நையாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.
நஸ்ரியா கடைசியாக ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா படத்தில் நடித்தார். குறைவான படங்களிலேயே நடித்திருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் மலையாள முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து நஸ்ரியா தற்போது குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்த நிலையில் நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரெஷ்டாரண்ட் ஒன்றில் அமர்ந்து ஜூஸ் சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் நம்ம நஸ்ரியாவா இது! இப்படி ஆளே மாறிட்டாரே என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.