மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது... நானும் ரவுடி தான் படத்தில் இவருக்கு பதில் முதலில் நடிக்கயிருந்தது இந்த பிரபல நடிகையா... யார்னு தெரியுமா.?
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் நானும் ரவுடி தான். இப்படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இந்த படத்தில் அவர் முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார்.
மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் கெமிஸ்ட்ரி அனைவராலும் ரசிக்கும் வகையில் இருந்தது. நானும் ரவுடி தான் படத்தின் பாடல்களும் சரி, காது கேட்காத பெண்ணாக நடித்த நயன்தாராவின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் முதலில் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் நஸ்ரியா தான் நடிக்க இருந்தாராம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு தான் நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் கதையை கூறியுள்ளாராம்.