மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த மாதிரி விஷயங்களால் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட நடிகை.. பேட்டியில் உண்மையை வெளியிட்ட பிரியாமணி.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரியாமணி. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான 'பருத்திவீரன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார். மேலும் முதல் படத்திலேயே மிகப்பெரும் வெற்றி அடைந்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.
'பருத்திவீரன்' திரைப்படத்திற்காக இவருக்கு பல விருதுகள் குவிந்தன. இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்தார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் வெளியாகும் 'ஜவான்' திரைப்படத்தில் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் பிரியாமணி முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கலந்து கொண்ட பேட்டியில் மனமுடைந்து பேசி இருக்கிறார்.
அப்பெட்டியில் ப்ரியா மணி, "என்னுடைய நிறத்திற்காக நான் இன்று வரை விமர்சிக்கப்படுகிறேன். மேலும், வேறு மதத்தை திருமணம் செய்து கொண்டதால் மத ரீதியாக பலர் என்னை திட்டியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் கேலியால் மிகவும் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு ஆளானேன்" என்று கூறியிருக்கிறார்.