மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண்ட்டி என்று கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பிரியாமணி..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியாமணி. இவர் தமிழில் முதன் முதலில் பாரதிராஜா இயக்கத்தில் நடித்திருந்தார். இதன் பின்பு பாலு மகேந்திரா இயக்கத்திலும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்ற மிகப்பெரிய இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்ததால் சினிமா துறையில் கவனத்தைப் பெற்றார். இதையடுத்து கார்த்தி நடிப்பில் வெளியான 'பருத்திவீரன்' திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து திரைத்துறையில் நடித்து வந்தார். தற்போது பிரியாமணி அட்லீ இயக்கத்தில் 'ஜவான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த பிரியாமணி, "நான் தொடர்ந்து நடிப்பதற்கு என் கணவர் தான் காரணம். மேலும் எனக்கு நாற்பது வயதாக போகிறது. இதனால் என்னை ஆன்ட்டி என்று பலர் அழைக்கிறார்கள். இவரின் பேச்சு இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.