மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடுமைப்படுத்திய போலீஸ் எஸ்.ஐ.! கணவன் மீது நடிகை ராதா புகார்.! சற்று நேரத்தில் மனம் மாறிய நடிகை..!
சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ராதா (39). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து விட்டு சென்னை சாலிகிராமம் பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தார்.
நடிகை ராதாவுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் கொண்ட எண்ணூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் கடந்த ஓராண்டாக வசந்தராஜா சாலிகிராமத்தில் நடிகை ராதாவுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் வசந்தராஜாவுக்கும் நடிகை ராதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. நடிகை ராதாவை உதவி ஆய்வாளர் வசந்தராஜா அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகக் கூறி நடிகை ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கணவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டதால் அந்த புகாரை நடிகை ராதா வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.