மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவன் - மனைவி பிரச்சனையில் இந்த தவறை மட்டும் செய்தேவிடாதீர்கள்.. பிரபல நடிகை அட்வைஸ்.!!
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான அந்தஹீனில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களிலும் நடித்துள்ளார்.
அத்துடன் கடந்த 2012-ல் லண்டனை சேர்ந்த இசைகலைஞரான பெனடிக் டெய்லர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் காதலர்கள் மற்றும் தம்பதிகளுக்கு ராதிகா ஆப்தே முக்கியமான ஆலோசனை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, "கணவன் - மனைவி அல்லது காதலன் - காதலி இருவரிடையே ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டால், மூன்றாம் மனிதனிடம் ஆலோசனை பெறவே கூடாது. அது இல்லற வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கைக்கு ஆபத்தானது.
எப்போதெல்லாம் நாம் மூன்றாம் நபரிடம் ஆலோசனை கேட்கிறோமோ, அப்போதெல்லாம் உறவில் விரிசல் தொடங்கிவிட்டது என்று கூறலாம்" என தெரிவித்துள்ளார்.