மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி கூட பண்ணுவாங்களா?.. இடுப்பில் அந்தமாதிரி டாட்டூவை குத்திய நடிகை ராதிகா ஆப்தே..! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு பெங்காலி படமான அந்தஹீனில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் பத்லாபூர், மஞ்சி- தி மவுண்டன் மேன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.
இதனை தொடர்ந்து குல்ஷன் தேவையா மற்றும் ஷஹானா கோஸ்வாமி நடித்த தி ஸ்லீப்வாக்கர்ஸ் மூலம் ஆப்தே இயக்குனராக அறிமுகமானார். மேலும் தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் நடித்துள்ளார்.
அத்துடன் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞரான பெனடிக்ட் டெய்லரை கடந்த 2012-ல் திருமணம் செய்துகொண்ட நிலையில், ஹிந்தியில் உருவாகி வரும் விக்ரம்வேதா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் நடிகை ராதிகா ஆப்தே, தனது உடலில் ஆமை வடிவத்தை பச்சை குத்தியுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த டாட்டூவை பார்த்த பலரும் ஆச்சர்யத்தை பதிவு செய்துள்ளனர்.