திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜயின் மதுர பட நாயகியா இது... ஆள் அடையாளம் தெரியாமல் எப்படி உள்ளார் என்று பாருங்கள்... ரசிகர்கள் ஷாக்!!
தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர். மாதேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹூட் அடித்த திரைப்படம் தான் மதுர. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரஷிதா நடித்திருந்தார். சோனியா அகர்வால், வடிவேலு போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர்.
ரஷிதா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கன்னடத்தில் ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார். சிறந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகை என்பதை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு சேவைகள் பல செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் பிரேம் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரஷிதாவுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். தற்போது அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அட மதுர பட நடிகையா இது ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி குண்டாகிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.