ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
எனக்கு லவ் மேரேஜ்தான்.! ஆனா அது பிடிச்சாதான் பண்ணிப்பேன்.! மனம் திறந்த நடிகை ரம்யா பாண்டியன்!!
தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து அவர் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தார். ஆனாலும் பெருமளவில் பிரபலமாகாத அவர் தனது மொட்டை மாடி போட்டோசூட்டால் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். பின்னர் அவருக்கு ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ரம்யா பாண்டியன் தனது போட்டோ சூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போதெல்லாம் தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தனது திருமணம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, தனது வாழ்க்கையில் தற்போது வரை நான் யாருடனும் கமிட் ஆகவில்லை, சிங்கிளாகதான் உள்ளேன். ஆனால் எனது திருமணம் காதல் திருமணம்தான். ஒருவரது லுக் எனக்கு பிடித்தால்தான் அவரை வாழ்க்கைத்துணையாக ஏற்பேன். அதிலும் குறிப்பாக அவரது கண்கள் எனக்கு பிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.