திருமணம் முடிந்த கையோடு, மீண்டும் விஜய் டிவியில் களமிறங்கிய பிரபலமான நடிகை! எந்த சீரியலில் தெரியுமா??



actress-rashmi-re-entry-in-rajaparvai-serial

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் ஹீரோவாக மிர்ச்சி செந்தில் டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார். இதில் ஒருவருக்கு ஜோடியாக தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ராஷ்மி ஜெயராஜ். 

இந்நிலையில் அந்த தொடர் கொரோனோவால் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து ஹீரோயின்கள் வர முடியாததால் ஒரு வழியாக முடிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து வேறு புதிய கதையுடன் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் 2 ஒளிபரப்பாகி வருகிறது.

இதற்கிடையில் நடிகை ராஷ்மி ஜெயராஜுக்கு சமீபத்தில் ரிச்சு என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அவர் மீண்டும் விஜய் டிவியில்  புதிதாக தொடங்கவிருக்கும் ராஜபார்வை என்ற சீரியலில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த தொடரில் சந்திரலேகா தொடரில் ஹீரோவாக நடித்த முனாப் ரகுமான் கதாநாயகனாக நடிக்கிறார். அவர் பார்வையற்றவராக இத்தொடரில் நடிக்கிறார் இதன் ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.