போக்ஸோவில் கைதான த.வெ.க நிர்வாகி.. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.!



Thenkasi al ameen arrested by pocso who sexually assaulted school girl

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆரம்பிக்கப்பட்ட நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் அல் அமீன் இணைந்து நிர்வாகியாக பணியாற்றிக் கொண்டு வருகிறார். இந்த சூழலில் தற்போது அவர் போலீசாரால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் சட்டமான போக்சோ சட்டத்தின் அடிப்படையில் கைதாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

TVK

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே வசித்து வருகின்ற ஒரு பள்ளி மாணவிக்கு அல் அமீன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அல் அமீன் மீது வழக்கு தொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெயிண்ட் அடிக்க ஆள் வைத்த மாமனார்.. பலே வேலை பார்த்த நபர்.. மருமகள் கண்ட காட்சி.!

இதையும் படிங்க: பையில் இருந்த மர்மம்.. விடாமல் துரத்திய நாய்.. கன்னியாகுமரியில் பகிர் சம்பவம்.!