திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னம்மா இப்படி எல்லாம் போஸ் கொடுக்குறீங்க... வித்தியாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் ராஷ்மிகா... வைரல் புகைப்படம்!!
நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதாகோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக கொடிகட்டி பறந்து வருகிறார். ராஷ்மிகா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார்.
பின்னர் பாலிவுட்டிலும் களமிறங்கி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான புஷ்பா படத்திலும் ஹீரோயினாக நடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் நீண்ட நாள் ஆசையான தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மிகா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் வச்சக்கண்ணு வாங்காமல் அப்படியே பார்த்து லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.