மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன இப்படியெல்லாம் சொல்றாங்களே.! பிரபல தொலைக்காட்சியை வறுத்தெடுக்கும் நடிகை ரச்சிதா!! இதுதான் காரணமா??
விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. அதனை தொடர்ந்து அவர் நாம் இருவர் நமக்கு இருவர் 2வில் ஹீரோயினாக நடித்த நிலையில் அதிலிருந்து பாதியிலேயே விலகினார் அதனைத் தொடர்ந்து அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று அசத்தலாக நடித்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென அந்த தொடர் தற்போது முடிவடைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் நடிகை ரச்சிதா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மோசமாக வறுத்தெடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர், வாழ்த்துகள் கலர்ஸ் தமிழ்... நல்ல கருத்துள்ள சீரியலை முடித்ததற்காக வாழ்த்துகள்.
இனியாவது நாங்கள் உங்களுடைய பொய்யான புரொமோஷனிலிருந்து ஃப்ரீயாக இருக்கலாம். உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த புராஜக்ட்டை செலக்ட் பண்ணாதீங்கன்னு என்னிடம் சொல்லி சிரித்த அனைவரையும் திட்டிவிட்டு நான் இதில் கமிட்டானேன். ஆனால் இன்று மக்களே நான் தான் தவறான முடிவு எடுத்துள்ளேன். கலர்ஸ் தமிழ் அவமானம் இது.
நீங்கள் சிறப்பாக தெரிவதற்காக தயவுசெய்து உங்களுடைய குறைகளை நடிகர்கள் மீது போடாதீர்கள். நீங்க பண்ண வரைக்குமே போதும்! நல்லா இருங்க! இப்பொழுது முடிக்கவே அவசியமில்லாத தொடரை நீங்கள் வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளீர்கள் என பல பதிவுகளை ஆவேசமாக வெளியிட்டுள்ளார்.