என்னை விரும்பினால் இதயத்தில், வெறுத்தால்..., - தன்னை விமர்சிக்கும் நபர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த நடிகை ரோஜா..!!



Actress roja tweet about haters

 

திரைத்துறையில் இருந்து அரசியல்வாதியாக தற்போது சாதித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் ரோஜா. இவர் ஆந்திரபிரதேசம் மாநிலத்தின் அமைச்சராக இருந்து வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இவர் திருப்பதி கோவிலுக்கு சென்றபோது, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். 

Actress roja

இந்த பேட்டி சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிலையில் தன்னை விமர்சிக்கும் நபர்களுக்கு ஆந்திரபிரதேச அமைச்சரான நடிகை ரோஜா டிவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார். 

அதாவது, "நீங்கள் என்னை வெறுத்தாலும், விரும்பினாலும் எனக்கு இரண்டுமே சாதகங்கள் தான். என்னை நீங்கள் விரும்பினால் இதயத்தில் இருப்பீர்கள், வெறுத்தால் நான் உங்களின் மனதில் இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.