மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜிம்மில் நடிகை சமந்தா செய்துள்ள சாகசத்தை பாருங்கள்! புகைப்படம்!
பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் நடிகை சமந்தா.
பானா காத்தாடி படத்தை தொடர்ந்து சூர்யா, விக்ரம், விஜய் என அணைத்து தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் சமந்தா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நானியுடன் சமந்தா இணைந்து நடித்த நான் ஈ திரைப்படம் இவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆக்கியது. அதை தொடர்ந்து விஜயுடன் கத்தி, தெறி, மெர்சல் என மூன்று திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
தமிழ் சினிமாவில் கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் சீமாராஜா படத்தில் நடித்திருந்தார். சிலமாதங்களுக்கு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார் நடிகை சமந்தா.
நடிகை சமந்தா எப்போதும் தனது உடலை பிட்டாக வைத்துக்கொள்ள கூடியவர். மேலும் அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்ளுபவர். இவ்வாறு அவர் ஜிம்மில் எடுக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரையும் ஊக்குவிப்பார். அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு தலைகீழாக நின்று பயிற்சி பெரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பாகத்தில் வெளியிட்டுள்ளார் சமந்தா.